Best Tweets of 1Q 2015

Featured

Uttamavillain – Review

Featured

உத்தமவில்லன்

(No Spoilers, I hope. விமரிசனம் எனது தனிப்பட்ட கருத்தே!)

விஸ்வரூபம் ரிலிசான சமயத்தில் பாலச்சந்தர் கமலிடம் சொன்னது “கமல், நீ மிகப்பெரிய ஸ்டார் ஆயிட்டே. அதற்காக உன் கதைகளிலும் இப்போது பிரம்மாண்டம் வந்துவிட்டது. அப்படி கமல் என்கிற ஸ்டார்-ஆக இல்லாமல், கமல் என்ற நடிகனைக் காட்டும் உணர்வுபூர்வமான கதைகளும் நீ செய்யவேண்டும்” என்று ஏங்கிக் கேட்ட ஒரு பேட்டியைக் கண்டிருக்கிறேன். அவர் ஏக்கத்தைப் பூர்த்தி செய்யும் விதமான படம் உத்தமவில்லன்.

பாலச்சந்தருக்கு அஞ்சலி/சமர்ப்பண வகையில் கமல் சொல்லும் கவிதையுடன் படம் ஆரம்பிக்கிறது. மனோரஞ்சன் என்ற நடிகனின் கதையும், அவனை வைத்து எடுக்கப்படும் ஒரு படத்தின் கதையும் மாறிமாறிச் சொல்லப்படுகிறது. ஒன்றில் நவீனத்துவம் மற்றும் யதார்த்தம். இன்னொன்றில் நாடகத்துவம் (தெய்யம்+வில்லுப்பாட்டு வடிவம்). இரண்டும் மாறிமாறி வரும் ஒரு திரைக்கதை வடிவம். இதற்கு மேல் கதையைச் சொல்லப்போவதில்லை.

கமல் வரும் முதல் சில காட்சிகளில் தியேட்டரில் விசில் பறக்கிறது. ஆனால், இது விசில் அடிப்பவர்களுக்கான படம் அல்ல. மாஸ் காட்டி, கமலை இன்னும் ஸ்டாராகக் காட்ட ஆயிரம் வாய்ப்புகள் இருந்தும் யதார்த்தத்தை மீறாமலே படம் செல்கிறது. இன்னும் சொல்லப்போனால், மனோரஞ்சன் என்ற நடிகனின் குறைபாடுகளை, அந்தரங்கத்தை மிக யதார்த்தமாகவே சொல்கிறது. திரையில் வீரனை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை அளிக்கலாம். கமல் தன் கேரக்டரை பலவீனமாகக் காட்டிக்கொண்ட படங்கள் ஓடியதில்லை. இதற்கு எப்படி வரவேற்பு இருக்கப்போகிறது என்று தெரியவில்லை. கமலின் நடிப்பில் இப்படம் இன்னொரு மகுடம். 200 படங்களுக்கும் அதிகமாக நடித்திருக்கிறார். 56 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். இருந்தும் இன்னும் எப்படிப் புதுவிதமாக நடிக்கமுடிகிறது இவரால் என வியக்கவைக்கிறார் கமல்! சில காட்சிகளில் ரசிகர்கள் அதிர்ந்து போவது நிச்சயம்.

படத்தின் எல்லா நடிகர்களும் அவர்கள் பாத்திரங்களைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். மகன் அடிபட்டுக்கிடக்கையில் நாசர் செய்த பாத்திரம் போல் தெரியவில்லை. கலகலப்பான வேடம் அவருக்கு. ஜெயராம்-க்கு அதிகம் வாய்ப்பில்லை. பார்வதி (மேனனா, நாயரா?) நல்ல அழகு. நடிப்பும் பொருத்தமாகவே உள்ளது. ஊர்வசி, எம்.எஸ். பாஸ்கர், பாலச்சந்தர், K.விஸ்வநாத் என்று அவரவர் பாத்திரங்களைக் கச்சிதமாகவே செய்துள்ளனர்.

தெய்யம்+வில்லுப்பாட்டு வடிவிலான காட்சிகளில் பல இடங்களில், தியேட்டரில் சிரிப்பலைகள் வருகிறது. ஆனாலும், எனக்கு இதுவே சற்று தொய்வை ஏற்படுத்துவதாகத் தோன்றுகிறது. கிரேசி மோகன் வசனம் எழுதியிருந்தால் படம் ப்ளாக்பஸ்டர் ஆகியிருக்கும் என்று நினைக்க வைப்பது நிஜம். கமல் ரசித்த அளவு ரசிகர்கள் இக்காட்சிகளை ரசிப்பார்களா என்பது தெரியவில்லை.

ஜிப்ரானின் இசையில் இரண்டு பாடல்கள் நன்றாக இருந்தாலும், மற்ற பாடல்கள் கொஞ்சம் பொறுமையைச் சோதிக்கின்றன. VFX பொதுவாகக் குறை சொல்லும்படி இல்லையென்றாலும், சில காட்சிகளில் (புலிப்)பல்லிளிகின்றன. (படம் பார்த்தால்தான் இந்த வாக்கியம் புரியும்). விஸ்வரூபம் படம் இன்னும் வெளிவராததன் காரணமும் புரிகிறது. Kamal, the director, needs excellence. VFX இன்னும் உன்னதமாக (விஸ்வரூபம் படம் போல) அமையவில்லை.

கமலின் படங்கள் புரிவதில்லை என்று சொல்பவர்களுக்கும், வேகமான திரைக்கதை வேண்டும், என்பவர்களுக்கான படம் அல்ல. அதனால், சூப்பர் ஹிட், ப்ளாக்பஸ்டர் வகையில் சேருவது கடினம். கமல் என்ற திரைக்கதைக் கலைஞனை கமல் என்ற நடிகன் வென்ற படம்.

திரு.லீ – பாகம் ஐந்து – வளர்ச்சிக்கு வழி

Featured

இந்தியாவில் திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. அல்லது, தொடங்கப்படுவதாக அறிவிக்கப்படுகின்றன. ஆனால், அவை நிறைவேறுவதற்குள் ஆட்சி மாறுகின்றது. அல்லது, ஏதாவது ஒரு காரணத்தினால் நடக்காமல் போகின்றது என்று எழுதியிருந்தேன் சென்ற வாரம். இதற்கு இரண்டு காரணங்கள் முக்கியமானதாக எனக்குப் படுகிறது: 1. ஊழல் 2.. ஆட்சி மாற்றம்/அரசின் நிலையில்லாத்தன்மை திரு. லீ ஆட்சியைக் கையில் எடுத்தபோது சுற்றியிருந்த நாடுகள் அனைத்தும் ஊழலில் மூழ்கி நலிந்திருந்தன. ஊழல் இல்லாத நாடே வளரமுடியும் என்பது அவரது திண்ணமான முடிவு. ஊழலற்ற தூய்மையான ஆட்சி அமைப்போம் என்பதன் சின்னமாக கட்சிக்காரர்கள் அனைவருமே வெள்ளை உடை அணியவேண்டும் என்று கட்டளையிட்டார். இன்றும் அவரது கட்சிக்காரர்கள் வெள்ளை உடையிலேயே பெரும்பாலும் காணப்படுவர். வெள்ளை உடையை கேலிக்குரியதாக ஆக்கிவிட்டனர் இந்திய அரசியல்வாதிகள். அது வேறு விஷயம். ஆனால், சிங்கப்பூரில் உள்ளொன்றும், புறமொன்றுமல்லாது தூய்மையான ஆட்சியே நடக்கிறது. ஊழலுக்குக் கடும் தண்டனைகள் உண்டு. அவர் பதவியேற்ற சில காலத்தில் அவருடைய நண்பர் ஒருவர் ஊழல் இழைத்துவிட்டார். நண்பர் எனக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் ஊழல் வளர்ந்து விடும் என்று அவருக்கும் தண்டனை அளிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன் அந்நண்பர் தற்கொலை செய்துகொண்டார். என் வாழ்வில் மிகவும் துயரமான நாள் அது என அவரது சுயசரிதையில் படித்த ஞாபகத்திலே இதை எழுதுகிறேன். (பெயர்கள் ஞாபகமில்லை). அரசாட்சியில் இருப்பவர்கள் (எம்.பி., மந்திரி, பிரதமமந்திரி உள்ளிட்டோர்) தவறு செய்யப் பல வாய்ப்புகள் வரும். அதை அடக்க இரண்டு வழிகளே உண்டு. ஒன்று, அவர்களுக்குக் கை நிறைய சம்பளம் கொடுத்து ஊழல் வாங்கத் தேவையில்லாத சூழ்நிலையை ஏற்படுத்தித் தருவது. கை நிறைய சம்பளம் வாங்கினாலும், ஊழல் செய்ய சிலர் மனம் விழையும். அதைக் கடும் சட்டங்களால் தண்டிக்கலாம். இந்த இரு சூழ்நிலைகளும் சிங்கப்பூரில் உண்டு. அவ்வளவு பெரிய நாடான, அமெரிக்காவின் அதிபரானா ஒபாமாவை விட சம்பளம் நான்கு மடங்கு அதிகம் சிங்கப்பூர் பிரதமருக்கு. இதைக் குறை சொல்வோரும் உண்டு. ஆனால், பில்லியன் கணக்கில் டாலர்கள் புரளும் நாட்டில், ஓரிரு மில்லியன்கள் ஆண்டு சம்பளமாகத் தருவதில் தப்பேயில்லை. ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு லட்சக்கணக்கான கோடிகளைக் கொள்ளையடிப்பதை விட இது ஒரு நல்ல மாற்று என்பதே என் கருத்து. அரசமைத்துள்ள PAP கட்சியில் சேர விழைபவர்கள் பெரும்பாலும் நன்கு படித்தவர்களும், பண்பாளர்களாகவுமே இருப்பார்கள். படித்தவர்கள் எல்லாருமே பண்பாளர்கள் என்பதும் சாத்தியமில்லை என்பதை அறிந்தவர்கள் PAP கட்சிக்காரர்கள். அதனால், அவர்களை அரசியலில் சேர்க்கும்முன் அவர்களின் உளவியலைக் கண்டறிய Psychometric tests எனப்படும் சோதனைகளும் நடத்தப்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும், அரசுப்பணியில்/ஆட்சியில் உள்ள அனைவரும் அவர் தம் உடைமைகளை declare செய்யவேண்டும். Conflict of interest எனப்படும் பத்திரங்களைக் கையெழுத்து இடுவது என்று ஊழலைத் தடுக்கப் பல நடவடிக்கைகள் உண்டு. இவற்றின் காரணமாக ஊழல் குறைவான நாடுகளில் சிங்கப்பூர் முதல் பத்து இடங்களுக்குள்ளாகவே இருந்து வருகிறது. அமேரிக்கா இருபதுக்குள்ளும், இந்தியா முதல் நூறு நாடுகளுக்குள்ளும் இருந்து வருகின்றன. ஊழலைத் தடுத்தது நல்ல திட்டங்களை வகுக்கவும், மக்களுக்குக் கொண்டு செல்லவும் மிக முக்கியமானதாக இருந்தது. அடுத்தது, ஆட்சி மாற்றம். ஓர் அரசு அதன் மக்களுக்கு நல்லது செய்ய நிலையான ஆட்சி வேண்டும். இன்னும் ஐந்து வருடத்தில் நாம் இருப்போமோ இல்லையோ என்று நினைப்பவர்கள் அந்த ஐந்து வருடத்தில் நம் குழந்தைகளுக்காக என்ன சுருட்ட முடியுமோ அதைச் செய்வார்கள். அது ஒரு விதமான எண்ணம். ஆனால், திரு. லீ அவர்களுக்கு சிங்கப்பூர்தான் முதல் குழந்தை. அதை வளர்த்து ஆளாக்குவதையே அவர் முதல் கடமையாகக் கொண்டிருந்தார். கம்யூனிஸ்ட்டுகள்தான் அவரது முதல் அரசியல் எதிரிகள். அவர்களை அடக்கி ஒடுக்கியது ஒரு விதமான ஸ்திரத்தன்மையை அளித்தது. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை மட்டுமே தெரிவிக்கும் கட்சியினராக இருக்கக்கூடாது. அவர்கள், நல்ல விஷயத்துக்காக ஒன்று சேர்ந்து உழைக்கவேண்டும் என்பதே இங்குள்ள நிலைமை. முறையில்லாமல் அவதூறு பேசுபவர்கள் கடும் வழக்குகளைச் சந்தித்து ஓட்டாண்டியாகும் அளவு அவதூறு வழக்குகள் நடைபெறும். ஆரம்பக்காலத்தில் இது போன்ற சில நடவடிக்கைகள் தேவைப்பட்டன. ஆனால், இவை எல்லாவற்றிற்கும் மேலாக முக்கியமான காரணம் திரு. லீ-யின் கட்சி நமக்கு நல்லதையே செய்யும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி அதைத் தொடர்ந்து செய்து காட்டியதுதான். ஒவ்வொரு தேர்தலிலும் கிட்டத்தட்ட எண்பது முதல் தொண்ணூறு விழுக்காடு வரையிலான வாக்குகளை திரு.லீ-யின் PAP கட்சி பெற்று வந்தது/வருகிறது. இத்தகைய ஸ்திரத்தன்மை காரணமாக எடுக்கப்படும் முடிவுகள் தொலைநோக்கு கொண்டவையாக இருந்து நாட்டுக்கு எப்போதும் நன்மையே பயக்கின்றன. திரு. லீ-யின் சிங்கப்பூர் தொடரும்…..

திரு.லீ – பாகம் நான்கு – Garden City

Featured

சிங்கப்பூரைத் தொழில் நகரமாக மாற்ற திரு. லீ வகுத்த திட்டங்களையும், எடுத்த முயற்சிகளையும் சென்ற வாரம் பார்த்தோம். இது வெளிநாட்டு முதலாளிகள் கடை விரிக்க அவர் செய்த செயல் அல்ல. நம் நாட்டுத் தண்ணீரை உறிஞ்சி அதில் சர்க்கரை கலந்து நம் நாட்டிலேயே கெடுதலான பானங்களை விற்கும் கம்பெனிகளைக் கொண்டுவருவது Globalization அல்ல. சீனா, இந்தியா போன்ற பெருநாடுகளுக்கு உள்ளூர் சந்தை உண்டு. Ford, Nokia போன்ற பல கம்பெனிகள் இந்தியா வந்து தொழில் செய்வது பெரும்பாலும் உள்ளூர் சந்தைக்காக. திரு.லீ செய்தது அதுவல்ல. சிங்கப்பூர் என்ற சிறிய ஏழை (1965ல்) நாட்டில் உள்ளூர் சந்தை கிடையாது. அவர் செய்த வேலை எல்லாம் உள்ளூர் மக்களுக்கு வேலை கிடைத்து வளம் பெற வேண்டும் என்பதற்காகவே.

தொழில்நகரமாக மாற்ற இடம் வேண்டும். அதே சமயத்தில் நாட்டின் இயற்கையும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். சீனாவை எடுத்துக்கொண்டால், அங்கு pollution ஒரு பெரிய தலைவலி. அங்குள்ள தொழில் முதலைகளே அந்த நாட்டில் தங்குவதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வெளிநாட்டுக் காரர்கள் கடை விரித்தாலும் நாடு பாதிக்கப்படக்கூடாது என்பதில் அவர் முதலிலிருந்தே உறுதியாக இருந்தார். சற்றே மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் நாட்டின் ஒரு மூலையில் நிறுவப்பட்டன. ஆரம்பத்தில் பெட்ரோல் சுத்தம் செய்யும் நிறுவனங்கள் இருந்தாலும், நாடு முன்னேற முன்னேற சுகாதாரமற்ற தொழில்கள் சிங்கப்பூரில் குறைந்துவிட்டன.

National Parks Board என்றொரு அமைப்பை ஏற்படுத்தி, சிங்கப்பூரைப் பசுமையாக வைத்திருக்கக் கட்டளையிட்டார். பல நாடுகளுக்கும் இதன் அதிகாரிகள் சென்று, சிங்கப்பூரில் வளரும் வகையான புல், மரம், செடி வகைகளைக் கொண்டுவந்து நடச் செய்தனர். சிங்கப்பூருக்கு நான் முதல்முதலில் வருகையில் என்னை ஆச்சரியப்படச் செய்ததும் இந்த விஷயமே. Concrete Jungle-ஐ எதிர்பார்த்திருந்த எனக்கு சாலையோரம் முழுவதும் கண்ட பசுமை ஓர் இனிமையான அதிர்ச்சி. இன்றும் சில இடங்களுக்குச் செல்லும்போது எனக்கு இந்த ஆச்சர்யம் உண்டு.

Clean and Green Chennai என்றொரு திட்டம் வந்தது ஸ்டாலின் மேயராக இருக்கையில். அது சிங்கப்பூரை inspiration-ஆகக் கொண்டிருந்த திட்டமே. இதை திரு. லீ அமல்படுத்தியது 1960-களில். இது எந்தவொரு consultancy நிறுவனமோ எனக்கு அமைத்துக்கொடுத்த வாக்கியம் அல்ல. என் சிந்தையில் தோன்றியது எனத் திரு.லீ சொல்லியிருக்கிறார். சுகாதாரமான வாழ்க்கை மக்களுக்கு அமைய வேண்டும் என அவர் நினைத்தது ஒரு காரணம். மற்றொரு காரணம், இங்கு வரும் தொழில் நிபுணர்கள் (அப்போதிருந்த) குப்பையான சூழலை விரும்பமாட்டார்கள். தொழில் செய்யும் நம்பிக்கை அவர்களுக்கு வராது என்ற எண்ணம் மற்றொரு காரணம். அதற்காக திரு. மோடியின் Clean India movement போன்றொரு திட்டத்தையும் அவர் அறுபதுகளில் செய்தார். இந்தக் கீச்சைப் பார்ப்பவர்களுக்குத் தெரியும் மோடிக்கு யார் inspirationஆக இருந்திருப்பார்கள் என்று. (கீச்சிலுள்ள படத்தையும் பாருங்கள்)

https://twitter.com/NEAsg/status/580543407556268032

சிங்கப்பூரிலுள்ள சீன, இந்திய, மலாய் மக்கள் படிக்காத, சுகாதாரம் அறியாதவர்களாகவே இருந்தார்கள். அவர்களைத் திருத்த சற்றே கடினமான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே காரியம் நடக்கும் என்று குப்பை போடுவதைத் தடுக்கக் கடும் நடவடிக்கைகள் எடுத்தார். துப்பினால் அபராதம், குப்பை போட்டால் அபராதம், பிரம்படி, அல்லது சீர் திருத்த நடவடிக்கை (குப்பை போடுபவர்கள் குப்பை பொறுக்கவேண்டும், அது செய்தித்தாள்களிலும் புகைப்படமாக வரலாம்) போன்ற கடும் நடவடிக்கைகள் ஆரம்பகாலத்தில் இருந்தன. சில ஆண்டுகளில் அது சுகாதாரம் பற்றிய Campaign ஆக மாறியது. இப்பொழுதும் அபராதம், தண்டனை எல்லாம் உண்டு என்றாலும் பெருவாரியான மக்கள் சுகாதாரம் பின்பற்றுவதால் தண்டனை நடவடிக்கைகள் குறைந்துள்ளன. சூயிங்கம் விற்பதற்கு இன்னும் தடை உண்டு. ரயில், பஸ் போன்றவற்றில் உணவருந்தத் தடை உண்டு. இவை சற்றே கொடூரமாகத் தோன்றினாலும், சுத்தமான அமைப்பைப் பார்க்க நினைப்பவர்களுக்கும், சுகாதாரமாக இருக்க நினைக்கும் நாகரீகமான மக்களுக்கும் இவை பெரிதாகத் தோன்றுவதில்லை.

சிங்கப்பூரின் ஆறு ஒரு காலத்தில் நம் கூவம் போன்றேயிருந்தது. தொழிற்சாலைக் கழிவுகள், மற்றும் அசுத்தம், நாற்றம் நிறைந்த பகுதியாக இருந்தது. அதைச் சுத்தம் செய்யும் ஒரு பணியைத் திட்டமிட்டார். அப்போது பலரும் “இது நடக்கிற காரியமா” என்று நினைத்ததாகவும் கேட்டிருக்கிறேன். ஆனால், பத்து ஆண்டுகளில் நடந்து முடிந்த அந்த முயற்சியில் ஆறு பளிச்சிட்டது. பிரியா படத்தில் ரஜினி boatஇல் சென்று சண்டையிடும் காட்சி அங்கேயே எடுக்கப்பட்டதென நினைக்கிறேன். இந்தக் கீச்சைப் பார்ப்பவர்களுக்குத் தெரியும் அன்றிருந்த சிங்கப்பூர் நதியும், இன்றுள்ள நதியும்!

https://twitter.com/twittornewton/status/589783396726939649

இந்தியாவில் திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. அல்லது, தொடங்கப்படுவதாக அறிவிக்கப்படுகின்றன. ஆனால், அவை நிறைவேறுவதற்குள் ஆட்சி மாறுகின்றது. அல்லது, ஏதாவது ஒரு காரணத்தினால் நடக்காமல் போகின்றது. நல்லது நடக்க வேண்டுவோம்.

திரு. லீ-யின் சிங்கப்பூர் தொடரும்…..

திரு.லீ – பாகம் மூன்று – வளர்ந்த கதை

Featured

மலேஷியாவிலிருந்து பிரிந்த முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவும் இதைப் படிக்கலாம். மலேஷியாவிலிருந்து கழற்றி விடப்பட்ட சிங்கப்பூர் கிட்டத்தட்ட சென்னை அளவே உள்ள ஒரு நகரம். அதில் விவசாயத்தை நம்பி மில்லியன் கணக்கான மக்கள் வாழ முடியாது. எனவே, சிங்கப்பூரை ஒரு தொழில் நகரமாக ஆக்கினால் மட்டுமே வெற்றி காணமுடியும் எனத் திரு. லீ முடிவெடுக்கிறார், 1965ல். இதில் காந்தியின் போக்கிற்கும், திரு. லீயின் போக்கிற்கும் உள்ள வித்தியாசத்தைக் காணலாம். கிராமங்களே (விவசாயமே) இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திடும் என்றவர் காந்தி. அது இந்தியாவிற்கு வேண்டுமானால் சரிப்பட்டு வந்திருக்கலாம். காந்தியின் கருத்து நிறைவேறவில்லை, இந்திய மக்கள் நகரை நோக்கிச் செல்கிறார்கள் என்பது வேறு விஷயம். ஆனால், சிங்கப்பூரைப் பொறுத்தவரை திரு. லீ எடுத்த முடிவே சரியாக அமைந்தது. பல நாடுகளுக்கும் அது எடுத்துக்காட்டாக அமைந்தது.

1965 ஆம் ஆண்டு, தொழிற்போராட்டங்கள் சிங்கப்பூரில் நிறைந்திருந்த காலம். கம்யுனிஸ்ட் சங்கங்கள் நடத்திய போராட்டங்களால் மக்களும், முதலாளிகளும் அவதியுற்ற காலம். தொழில் வளர்ச்சிக்கு கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களின் போராட்டங்கள் இடையூறே விளைவிக்கும் என்று எண்ணி கம்யூனிஸ்ட்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கினார். பல கம்யூனிஸ்ட்டுகள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனாலேயே, பல மேலை நாடுகள் அவரை “சர்வாதிகாரி” என இப்போதும் முத்திரை குத்துகின்றன. சற்றே யோசித்துப் பார்த்தால், அந்தக் காலக்கட்டத்திற்கு, சிங்கப்பூருக்கு, அது தேவைப்பட்டதை அறியலாம். சமீபத்தில் திரு. லீ இறந்த போது, அவரால் சிறையில் அடைக்கப்பட்ட ஒருவரே கண்ணீர் விட்டு அழுததாய் ஒரு வலைப்பதிவு (சிறையில் அடைக்கபட்டவரின் மகளால் எழுதப்பட்ட பதிவு) படித்தேன். அதுபோல், அவர் செய்த எல்லாச் செயல்களும் நாட்டின் நலம் கருதியே செய்யப்பட்டன என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தொழிலாளர் நலனுக்குத் தொழிற்சங்கங்கள் அவசியம் என்று ஒரு மாற்றுச்சங்கத்தை நிறுவினர். NTUC என அழைக்கப்படும் அச்சங்கம் இன்றும் இருக்கிறது. பிரச்னைகள் வரும்போது அரசாங்கம், NTUC, மற்றும் தொழிலகம் என முத்தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான தீர்வு காணும் முறை பிறந்தது. ஒரு காலத்தில் சிங்கப்பூர் விமான நிறுவனத்தில் பெரும் போராட்டம் நடந்தபோதும், திரு. லீயே முன்னின்று பிரச்னையைத் தீர்த்து வைத்தார். முதலாளி-தொழிலாளி-அரசாங்கம் எனும் முத்தரப்புக் கூட்டணியினால் நல்ல பலன் கிடைத்தது. எப்போதும் போராட்டம் நடத்தும் கேரளா போலல்லாது தொழில் செய்யும் முதலாளிகளுக்கு நம்பகரமான ஓரிடம் கிடைத்தது. மலேஷியா கழற்றி விட்ட பத்தே ஆண்டுகளில், சிங்கப்பூரர் அனைவருக்கும் வேலை வாய்ப்புக் கிடைக்கும் நிலைக்கு வந்து விட்டது.

மக்களுக்கு வேலை கிடைக்கத் தொழில் வளரவேண்டும். தொழிலில் சிறந்து விளங்க பிறநாடுகளின் கம்பெனிகள் சிங்கப்பூருக்கு வரவேண்டும் என்பதும் அவர் எண்ணமாக இருக்கிறது. இந்தியா மற்றும் பல நாடுகளில் அப்போதிருந்த கொள்கைக்கு நேர்எதிரானது இந்தச் சிந்தனை. வெளிநாட்டுக் கம்பெனிகள் சிங்கப்பூருக்கு வருவதற்குப் பலமான எதிர்ப்பு இருந்தது – வழக்கம் போல் உள்ளூர் முதலைகளால்தான். ஆனால், அவர்களை மட்டும் நம்பினால் நாடு முன்னேறுவது கடினம் என்று எண்ணி, Economic Development Board (EDB) என்ற வாரியத்தை ஏற்படுத்தினார். அதன் பணி வெளிநாடுகளுக்குச் சென்று சிங்கப்பூரில் தொழில் செய்வதால் உள்ள நன்மைகளையும், வசதிகளையும் எடுத்துரைத்து கம்பெனிகளை சிங்கப்பூருக்கு வந்து தொழில் செய்யச் சொல்வதே. வரிவிலக்கு, இட வசதி, தடையில்லா மின்சாரம், தண்ணீர் என்று பல வசதிகளை வழங்குகிறார். அவரே முன்னின்று ஜப்பான், அமேரிக்கா, நெதர்லாந்து முதலிய நாடுகளின் முக்கிய கம்பெனிகளை சிங்கப்பூருக்கு வரச் செய்தார்.

தொழில் நிறுவனங்கள் சிங்கப்பூருக்கு வருவதற்கு அவர் செய்த சில பணிகள்:

 1. தொழிற்பேட்டை அமைத்தல். ஐம்பது வருடங்கள் முன்பு அவர் செய்த இவ்விஷயம்தான், இன்று இந்தியாவில் காணப்படும் IT Park – களுக்கு முன்னோடி.
 2. சிவாஜி, நீ அமெரிக்காவுக்கே போயிரு என்ற வகையில் இல்லாமல், சிவாஜி நீ சிங்கப்பூருக்கு வா என்ற வகையிலான அரசாங்கம்.
 3. பொருட்கள் எளிதாக சிங்கப்பூருக்கு வருவதற்கும், போவதற்குமான துறைமுக வசதி.
 4. (அப்போது படிக்காத கூலிகள்), சிங்கப்பூர் வளர்ந்த பின் படித்த, திறனுள்ள தொழிலாளர்கள்
 5. என்று அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், இந்தப் பகுதி நீள்கிறது. ஞாபகம் வர வர அங்கங்கே இதை எழுதுகிறேன்.

EDB என்ற அமைப்பு இன்றும் தொழிலமைப்புகளை சிங்கப்பூருக்கு அழைத்து வரும் பணியைச் செய்து கொண்டிருக்கிறது. தொழில்செய்ய வரும் நாடுகளிடம் லஞ்சம் கேட்கும் சில நாடுகளைப் போலல்லாமல், அவர்களுக்குப் பல சலுகைகளைக் கொடுத்து தொழில்/வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கிறது. அதுமட்டுமல்லாமல், அடுத்த கட்டத்திற்கு என்ன மாதிரித் திறமைகளை, தொழிலாளர்களை, வளர்க்க வேண்டும் என்றும் திட்டமிட்டு, ஆராய்ச்சி, திறன்கல்வி போன்ற நடவடிக்கைகளுக்கு உதவுகிறது. இதனாலேயே, சிங்கப்பூரர்களுக்குப் போதிய வேலைகள் கிடைத்து, எஞ்சிய வேலைகளுக்கு வெளிநாட்டவரும் வந்து வேலை செய்ய முடிகிறது.

**** பாகம் 4 அடுத்த வாரம் ****

Science – 1

விஞ்ஞானம் பற்றிய முதல் பதிவு இது என்பதால் விஞ்ஞானம் என்பது என்ன என்பதைச். சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். “இந்த உலகம் எப்படி இயங்குகின்றது?” என்ற கேள்விகளும், அக்கேள்விக்குக் கிடைக்கின்ற பதில்களுமே விஞ்ஞானத்தை வடிவமைக்கின்றன. உலகம் என்றால் உலகம் மட்டுமல்ல, பரவெளியிலிருந்து, அணுக்கள் வரை பல பொருள்களின், செயல்களின் காரணங்கள், விளைவுகளை அலசுவதே விஞ்ஞானம். அலசி ஆராய்வதில் பதில்கள் பெறப்படுகின்றன. பதில்கள் தவறென நிரூபிக்கப்படுகையில், ஒத்துக்கொண்டு சரியான பதிலைத் தேடி ஓடும் ஞானமே விஞ்ஞானம். இதில் சுயம் (ego) கிடையாது. விருப்பு, வெறுப்புகள் முக்கியம் கிடையாது. உண்மை என்பது மட்டுமே முக்கியம்.

அறிவியல் எப்படி நிகழ்கிறது என்பதற்கு ஓர் உதாரணமாகச் சந்திர கிரகணத்தை எடுத்துக்கொள்வோம். கற்பனையில் பழங்காலத்துக்குச் செல்வோம். கிரகணத்தைப் பார்த்துப் பயந்த/வியந்த ஒரு சிறுவன் தன் தந்தையிடம் கேட்கிறான்: ”அப்பா, நிலாவுக்கு என்ன ஆச்சு?”. இப்படிக் காண்பதும் (observation) கேள்வி கேட்பதும் (questioning) அறிவியலின் முக்கிய அம்சங்கள். பல அறிவியல் சித்தாங்களின் ஆரம்பம் கேள்வி கேட்பதுதான். “ஆப்பிள் ஏன் கீழே விழுகிறது? ஏன்\ மேலே செல்லவில்லை?” என்ற கேள்வியை நியூட்டன் புவியீர்ப்பு விசை கண்டுபிடித்ததன் தூண்டுதலாகத் தெரிந்த உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

இந்தக் காலத்தில் இப்படிப் பல கேள்விகளுக்கு google உதவியுடன் தேடினால் விடை கிடைத்துவிடும். கேள்விக்கு ஏற்கெனவே விடை இருக்கிறதா என்ற தேடுதல் அறிவியலின் முக்கிய அம்சம். Don’t reinvent the wheel என்பார்கள். அதாவது, சக்கரம் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. அதைக் கண்டு பிடித்து நேரத்தை வீணடிக்காதே என்பதே அதன் பொருள். Literature search / patent search போன்றவை விஞ்ஞான ஆராய்ச்சியின் முக்கிய அம்சங்கள். (Googleஇல் தேடுவதையே நிறைய research செய்தோம் என்று தமிழ்த்திரையுலகினர் திரைப்படப் ப்ரோமோஷன்களில் சீரியசாகச் சொல்லிச் சிரிக்க வைப்பார்கள்). அது மட்டும் research அல்ல.
அந்தச் சிறுவன்/தந்தை காலத்தில் google இல்லை. ஊரில் யாருக்கும் பதில் தெரியவும் இல்லை. தந்தை யோசிக்கிறார். (உங்களுக்குப் பிடித்தால் தந்தை என்று வரும் இடங்களில் அம்மா/பாட்டி என்று கூட வாசித்துக்கொள்ளுங்கள். என்னை, ஆணியவாதி என்று சொல்லாதீர்கள் ).. “அதுவா, நிலாவைப் பாம்பு முழுங்கிடுச்சு” என்கிறார் தந்தை. பாம்பு முழுங்கி நிலா மறைந்திருக்கலாம் என்பது ஓர் அனுமானம் (hypothesis). அச்சிறுவனின் தந்தையின் மூளையில், அவர் அறிவுக்கு எட்டிய வரையில், உதித்த சிந்தனை இவ்வளவே.
அனுமானம்/சிந்தனை அறிவியலின் இன்னொரு முக்கிய அம்சம். ஒரு நிகழ்வின் காரணம் இதுவாக இருக்குமோ என்று காரணங்களை வகைப்படுத்துதல் அறிவியல் வளர்ச்சியின் ஒரு முக்கிய அம்சம். அறிவியலின் அடுத்த நிலை, தந்தை (/பாட்டி) சொன்னது சரியா, தவறா என்று சோதிப்பது. அனுமானத்தைச் சோதிக்க வழியின்றியோ, மாற்றுக் கருத்து இல்லாத நேரத்திலோ இது போன்ற அனுமானங்களே பல சமயம் அறிவாக/ சாஸ்திரங்களாக எடுத்துக்கொள்ளப்பட்டன. நெடுங்காலமாக நம் ஊரில் கிரகணம் என்பது சந்திரனை ராகு/கேது என்ற இரு பாம்புகள் விழுங்கியதாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அறிவியல் என்பது அது போன்ற பழைய சித்தாந்தங்களில் தங்கி விடாது, கூடியவரை உண்மை எதுவோ அதை நோக்கி நகர்வதே. தற்போதைய விஞ்ஞானம், சந்திர கிரகணம் என்பது சந்திரன் மேல் விழும் பூமியின் நிழல், அதனால் நிகழும் இருட்டு என்று சொல்கிறது.

ஆதி காலம் தொட்டே அறிவியல் இருந்திருந்தாலும், அறிவியல் அளவு கடும் வளர்ச்சி கண்டதென்னவோ கடந்த இரு நூற்றாண்டு காலங்களில்தான். குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதி பிரமிக்கவைக்கும் கண்டுபிடிப்புகளைக் கொண்டது. “WTF, எப்படில்லாம் யோசிச்சிருக்காங்க” என்று விஞ்ஞானிகளே விஞ்ஞானிகளைப் பார்த்துப் பிரமிக்கும் காலகட்டம் அது. குவாண்டம் மெகானிக்ஸ் (quantum mechanics), ரிலேடிவிட்டி (relativity) சித்தாந்தங்களைப்போல் (theories) மிரளவைக்கும் கண்டுபிடிப்புகள் அத்தனை குறுகிய காலத்தில் இனி வருமா என்றால் சந்தேகமே. அணு பற்றிய பல உண்மைகளும், மின்னணுவின் (electron) அலைத்தன்மையும் (wave-particle duality) அதன் மூலம் நாம் உணர்ந்த பல புதிய தகவல்களும் மனித அறிவை மேம்படுத்தியதோடு மட்டுமின்றி, நம் வாழ்வையும் மேம்படுத்தின.
சென்ற நூற்றாண்டின் முதல் பாதி அறிவியலின் பொற்காலம் என்றால், இரண்டாம் பாதியைத் தொழில் நுட்பத்தின் பொற்காலம் எனலாம். ட்ரான்சிஸ்டர் (transistor) தொழில் நுட்பம் வளர்ந்து சிலிகான் சில்லுப் புரட்சி (revolution of integrated circuits) உண்டானது. கம்ப்யூட்டர் நம் வாழ்வின் முக்கிய அம்சமானது. கிட்டத்தட்ட இந்தக்காலத்தில்தான் சுஜாதா எழுதி வந்தார்.

சுஜாதா போன்றதோர் எழுத்தாளர் நமக்குக் கிடைத்தது அதிர்ஷ்டம் என்றாலும், இந்தக் காலகட்டத்தில் எழுத்தாளராக இருந்தது சுஜாதாவின் அதிர்ஷ்டம் எனவும் சொல்லலாம். ஹோலோகிராபியை (holography) மையமாக வைத்துக் “கொலையுதிர்காலம்”, ஹிப்னாடிசம்/brainwashing போன்ற சமாச்சாரங்களை வைத்து “நில்லுங்கள் ராஜாவே”, voice recognition-ஐ மையமாக வைத்து ஒரு கதை, image recognition-ஐ மையமாக வைத்து இன்னொரு கதை (பெயர்கள் மறந்து விட்டன), robotics-ஐ மையமாக வைத்து “என் இனிய இயந்திரா”, என்று பல நூல்களை அவர் எழுத முடிந்தது. கம்ப்யூட்டர் பற்றியும், மின்னணுவியல் (electronics) பற்றியும் அவர் ஏற்படுத்திய விழிப்புணர்வு பல தமிழர்களுக்கு வாழ்வளித்தது. IT துறை இந்தியாவில் காலடி எடுத்துவைத்த காலத்தில், சுஜாதாவின் எழுத்துக்களால் நிகழ்ந்த மாற்றங்கள் தமிழர்களுக்குப் பெரிதும் உதவியது.

இந்த நூற்றாண்டின் அறிவியல்/தொழில் நுட்பம் விசித்திரமானது. மாரத்தான் ஓடுபவனின் கடைசி சில மைல்கள் போன்று கடினமானது. Transistor கண்டுபிடித்தவர் யாரென்று கேட்டால் ஷாக்லி என்று பலரும் சொல்லி விடுவார்கள். ஆனால், இந்தக்காலத்தில் இதைக் கண்டுபிடித்தவர் இன்னார் என்று குறிப்பாகச் சொல்ல முடியாதபடி பலரின் உழைப்பு கலந்திருக்கிறது. புதிதாக வளரும் தொழில்நுட்பங்கள் கூட, அதை வைத்து சுஜாதா போல ஒரு கதை எழுத முடியாது என்ற அளவிற்கு சிக்கல் நிறைந்து (complex) இருக்கின்றன.

கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் சில சென்டிமீட்டர்கள் அளவிருந்த transistor, இப்போது சில நானோமீட்டர்களுக்குச் சுருங்கிவிட்டன. (நானோமீட்டர் என்பது ஒரு மில்லி மீட்டரில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு = 10-9 m) மயிரிழையைப் பத்தாயிரம் துண்டுகளாகக் கீறினால் அதில் ஒரு துண்டு எத்தனை சிறியதாக இருக்குமோ, கிட்டத்தட்ட அந்த அளவில் இருக்கின்றன தற்போதைய transistorகள். இதை இன்னும் எப்படிச் சிறியதாக ஆக்குவது என்று விழித்துக்கொண்டிருக்கிறது தொழில்நுட்ப உலகம். சிறியதாக ஆக்க முடிந்தாலும், சிறிதாக ஆக்கியதால் வரும் பிரச்னைகள் என்று வேறு உண்டு. இதுபோலப் பல துறைகளும் வேகமாக ஓடி முன்னேறி வந்து இப்போது மூச்சிரைத்துக் கொண்டிருக்கின்றன. எனக்குத் தெரிந்த வரை இந்த விஷயங்களை randomஆக அவ்வப்போது எழுதுகிறேன். அறிவியலை எளிமைப்படுத்தி எழுதுவதில் சில பிரச்னைகள் உண்டு. அறிவியல் நன்கு அறிந்தவர்களுக்குப் பிடிக்காமல் போகும். மேலும், புரிதலில் சிறு பிழைகள் ஏற்படும். அதை மன்னித்தருளுங்கள்.

முடிவை நெருங்குவதால் ஒரு கதை. PhD முடித்து முனைவர் பட்டம் பெறப்போகும் தருவாயில் உள்ள ஒரு மாணவனின் இறுதித்தேர்வு அது. அவன் தன் ஆராய்ச்சியைப் பற்றிப் பேசப்பேச, அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஆய்வாளரின் முகம் இறுகிக்கொண்டே வருகிறது. அவன் சொல்வது உண்மையானால், அந்த ஆராய்ச்சியாளர் நாற்பது வருடங்களாகச் செய்த ஆராய்ச்சி எல்லாம் உண்மையல்ல என்று ஆகிவிடும். அந்த மாணவனின் வழிகாட்டியும், மாணவனும் பயம் பாடி, தன்னம்பிக்கை பாதி கலந்து செய்த கலவையாக இருக்கிறார்கள். மாணவன் பேசி முடித்ததும், ஆய்வாளர் பல கேள்விகள் கேட்கிறார். வழிகாட்டிக்கோ “மாணவன் தோல்வி அடைந்து விடுவானோ?” என்று கொஞ்சம் பயம். கேள்விகள் கேட்டுக் களைத்த ஆய்வாளர் மாணவனிடம் சென்று, “Congratulations”. நீ ஜெயித்து விட்டாய். என் கருத்துக்கள் தவறென்று உறுதியாகி விட்டன என்று வாழ்த்துகிறார். தான் தோற்றாலும் பரவாயில்லை, சரியான கருத்து வெல்ல வேண்டும் என்று நினைத்த அவர்தான் நிஜமான விஞ்ஞானிகளின் பிரதிநிதி.

#நியூட்டன்_விஞ்ஞானப்பதிவுகள் (1)

கபாலி

கபாலி (Too late to be called a விமர்சனம்)

கபாலி பார்த்தாச்சு! முன்னரே திட்டமிடாத ஒரு மூன்று மணி நேரம் உபரியாகக் கிடைத்ததும், அந்த வேளை நான் கபாலி ஓடும் திரையரங்கின் அருகில் இருந்ததும் தற்செயலாக நடந்த நிகழ்வுகள். உடனே, ஒரு டாக்சி பிடித்து ஓடினேன். சில நிமிடங்கள் தாமதமாகத்தான் சென்றேன். “நம்பியார் கூப்பிட்ட உடனே என்ன எஜமான்னு வர்ற கபாலின்னு நினைச்சியாடா” என்று ரஜினி பன்ச் பேசிக்கொண்டிருந்தார். வாரநாள் என்பதால் கூட்டமில்லை (15% occupancy). கொடுக்கப்பட்ட சீட்டைக் கண்டுபிடிக்கச் சோம்பேறித்தனப்பட்டு, எனக்கு வசதியான ஒரு சீட்டில் உட்கார்ந்துகொண்டேன். ரஜினியின் ரிலீசைக் கொண்டாடும் பாடல் வந்ததும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு படத்தில் மூழ்கினேன்.

1. மெதுவான திரைக்கதை என்பது பலரது குற்றச்சாட்டு. திரைக்கதை வேகமாகத்தான் செல்ல வேண்டும் என்று இலக்கணம் எதுவும் இருக்கிறதா என்ன? மெதுவாக இருந்தால் தப்பில்லை. போரடிக்காமல் இருந்தால் சரிதான் என்பதே என் கருத்து. எனக்குப் படம் போரடிக்கவேயில்லை.
2. இன்னொரு பெருங்குறையாகச் சிலர் சொல்வது ஒரு நல்ல வில்லன் படத்தில் இல்லை. பாட்ஷா ரகுவரன் மாதிரி வருமா, படையப்பா ரம்யா கிருஷ்ணன் மாதிரி வருமா என்று சில புலம்பல்கள். படத்தில் ஒரு வில்லன்தான் வரவேண்டும் என்றும் ஒன்றுமில்லை. பல வில்லன்கள் இருக்கலாம். அவர்களின் வில்லத்தனமும் கூடக்குறைய இருக்கலாம். ஒண்ணும் பண்ணாம ஊதுவத்தி கொளுத்திக்கிட்டு இருக்கான்னு ஒரு சாடல். நன்றாகக் கவனித்திருந்தால் பின்புலத்தில் வில்லனை எதிர்த்துப்பேசியவன் தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கும் (தொங்கவைத்த) காட்சியில் வில்லனின் குரூரம் தெரிந்திருக்கும். சென்னை வந்து ஹோட்டலில் தங்கியிருக்கும் காட்சிகள், அட்டக்கத்தி தினேஷ் கொலை செய்யப்படும் காட்சி எனப்பல காட்சிகளும் வில்லன் இல்லாமலேயே பயத்தை உண்டாக்கின அல்லவா? அதுதான் நவீன வில்லன். அவன் எல்லா இடங்களுக்கும் சென்று அல்லது குரூரத்தைக் காட்டித்தான் நம்மை பயம் காட்டவேண்டும் என்றில்லை.
3. ரஜினி/ராதிகா ஆப்தே சந்திக்கும் காட்சிகளில் கண்ணீர் வந்தது நிஜம்.
4. படத்தின் பல காட்சிகளுக்கும் விளக்கம் இல்லை என்றொரு குற்றச்சாட்டு இருந்தது. ஆங்கிலப்படங்களில் இதுபோல் வந்தால் நாம் குறை சொல்வதில்லை. ஆனால், இது தமிழ்ப்படம். அதனாலேயே இப்படிக்கேள்விகளோ என்றே தோன்றியது. மூன்று மணி நேரப்படத்தை இரண்டரை மணி நேரத்திற்கு வெட்டியதாகப் படித்தேன். அதனால் வந்த விளைவுதான் இது என்றே தோன்றியது.

நாயகன் அல்லது தளபதியை அளவுகோலாக வைத்தால் படம் அந்த அளவுக்கு எட்டவில்லை என்று கண்டிப்பாகச் சொல்லலாம். ஆனால், லிங்கா, கோச்சடையான் படங்களை விட எவ்வளவோ பரவாயில்லை. ரஜினியை அவர் வயதுக்காரராகவே பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
விசிலடிக்கும் தீவிர ரசிகர்களை ஏமாற்றியிருக்கலாம். ஆனால், குறை சொல்லவேண்டும் என்று காத்திருந்தவர்களை ஏமாற்றாத சிறு குறைகளுள்ள திரைக்கதை (கண்டிப்பாக மொக்கையல்ல).
ஆயிரம் ரூபாய் கொடுத்துப் படம் பார்த்தவர்களை வேண்டுமானால் கபாலி ஏமாற்றியிருக்கலாம். ஆனால், நூற்றிஇருபதுக்குப் பார்க்க நினைப்பவர்களை ஏமாற்றாத படம்.

Dec2015

Raja – 1000

ஆங்கிலத்தில் படித்த ஒரு கதை முதலில்:

ஒரு கம்பெனிக்கு ஒரு குறும்படத்தை அனிமேஷனில் செய்ய வேண்டிய தேவை இருந்தது. Outsourcing வேலைக்குப் பலரும் ஒரு மாத அவகாசமும் ஒரு லட்சம் பணமும் கேட்க, ஒரே ஒருவர் மட்டும் ஒரு வாரமும் ஒரு லட்சம் பணமும் கேட்டார். எல்லோரும் ஒரு மாத வேலைக்கே ஒரு லட்சம்தானே கேட்கிறார்கள். நீங்கள் மட்டும் ஏன் ஒரு வாரத்திற்கு ஒரு லட்சம் கேட்கிறீர்கள் என அந்தக் கம்பெனி கேட்டபோது, அவர் சொன்ன பதில் : நீங்கள் கொடுக்கும் இந்த ஒரு லட்சத்தில் பெரும் பகுதி இந்த வேலையை ஒருவாரத்தில் திறம்படச் செய்யும் அளவுக்கு என் திறமையை வளர்த்துக் கொண்டதற்கான சம்பளம்.

பலவேளைகளிலும் ஒருவருடைய உழைப்பை நாம் ஜீனியஸ் என்ற சொல்லில் அடக்கி உழைப்பைப் போற்றத் தவறி விடுகிறோம். ராஜாவைப் பலரும் ஜீனியஸ் என்று அழைப்பார்கள். தவறில்லைதான். ஆனால், அதற்குப் பின்னால் இருந்த கடும் உழைப்பு எல்லோருக்கும் தெரியுமா எனத் தெரியவில்லை.

அண்ணன் பாவலருடன் கச்சேரிகளுக்கு அவர் செல்லாத இடங்களே இல்லை எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். திரைப்படங்களுக்கு வரும் முன்பே எஸ்பிபி-யுடன் கச்சேரிகள் நடத்தியதுண்டு. திரைப்படத்துறைக்கு வந்த பிறகும் எப்போதும் கல்வி கற்றுத் தன்னை மேம்படுத்திக் கொண்டதுண்டு.

அவர் உச்சத்தில் இருக்கும்போது (இப்போதும்?) கிட்டத்தட்ட ஒரு வாரத்தில் ஒரு படத்தின் வேலையை முடித்து விடுவார் எனக் கேட்டிருக்கிறேன். அதில் ஒன்று கூட அவசரத்தில் செய்தது போல் தெரியாது. ஒவ்வொன்றிலும் பாடல்களும் முத்துக்களாயிருக்கும். பின்னணி இசையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

அவர் form இழந்து விட்டார் என்றொரு கருத்து உண்டு. இருக்கலாம். ஆனால், என் பார்வையில் இல்லை என்றே சொல்வேன். வயதானபின் ஒரு பொறுப்பு வரும். இளம் வயதில் செய்த சில விஷயங்களைத் தொடுவதற்கு ஒரு கூச்சம் வரும். ராஜாவின் முதிர்ச்சி காரணமாக அவர் (இசையில் நமக்குத் தெரியாத பல) சிறுபிள்ளைத்தனங்களைத் தவிர்க்கிறார் என்றே நினைக்கிறேன்.

ஆயிரம் திரைப்படங்கள், அதுவும் எல்லாப் படங்களிலும் பல ஹிட் பாடல்களை இனியும் நாம் காண வேண்டுமெனில் அவரைப் போல் உழைக்கும், இசைக்குத் தம்மை அர்ப்பணிக்கும் ஒருவர் பிறக்க வேண்டும். அப்படி வந்தால் மட்டுமே இந்த சாதனையை முறியடிக்க முடியும். இன்னொரு ராஜா தமிழ்நாட்டில் வந்தால் அது தமிழ்நாடு செய்த தவமாகவே இருக்கும்.

Newton Awards

நியூட்டன் அவார்ட்ஸ்னு அவார்டு கொடுக்கலாம்னு நினைச்சேன். அது புதுமையாயிருக்காதுன்னு தோணி அதைக் கொஞ்சம் திசை மாற்றி நல்ல கீச்சர்களைப் பிறருக்கு அடையாளம் காட்டும் விதமாகப் பின் வரும் கீச்சைக் கீச்சினேன்

ஒரு தனிமனிதன்  பிறருக்கு அவார்டு கொடுப்பதை விட ஜனநாயக முறையில் கீச்சர்களே பிற கீச்சர்களைப் பாராட்டும் விதமாக அமைந்தது இது. சக கீச்சர்களைப் பாராட்ட ஒரு வாய்ப்பாகவும், சக கீச்சர்களின் அங்கீகாரத்தைப் பெற ஒரு வாய்ப்பாகவும் இது அமைந்தது.

 

எனக்குத் தெரியாத பல நல்ல கீச்சர்களை இதன் மூலம் அறிய முடிந்தது என சிலரது பாராட்டும், சில திட்டுக்களும் (அஜீத்/விஜய்) கிடைத்தது. என்றாலும், எனக்கு இது ஒரு மகிழ்ச்சிகரமான விஷயமாக அமைந்தது. கிட்டத்தட்ட 24 மணி நேரத்தில் 200 quoteகள் செய்யப்பட்டன. நிறையக் கீச்சர்கள் அங்கீகரிக்கப்பட்டனர். அவர்களுக்கு மென்ஷன் வந்திருக்கும். எல்லாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அதிகமாகப் பரிந்துரைக்கப்பட்ட சில பெயர்கள்:

@Kandaknd @kalasal @saathaan_ @arattaigirl @ZhaGod @veedhisatva @Mymindvoice @Withkaran  @BoopatyMurugesh @Chevazhagan @ItzNandhu @thoatta @PARITHITAMIL @mrithulaM

இனி முடிவுகளுக்கு வருவோம் :

இரண்டாம் இடத்தில் :

முதல் இடத்தில் இருப்பவர் :  @MrElani

பங்களித்த அனைவருக்கும் நன்றி !!!

 

டிப்ஸ் Tips

டாக்டர் வந்தனா @Vandhana1810 வின் டிப்ஸ்களின் தொகுப்பு

 1. கை கால் வலி. உடல்வலி. எல்லாவகையான காய்ச்சல் முதலானவைகளுக்கு பாராசிட்டமால் (paracetamol) மாத்திரை ஒருவேளைக்கு ஒன்று எடுத்துக்கொள்ளுங்கள் (crocin etc)
 2. சர்க்கரை, பிரஷர் உள்ளவர்கள் மாத்திரைகளை ப்ளாஸ்டிக் கவரில் போட்டு அருகிலேயே வைத்துக் கொள்ளவும் டயபடிக்ஸ்..வழக்கமானமாத்திரைகள் இல்லையெனில் , மெட்பார்மின்(metformin) மட்டும் காலை1 மாலை1 போடலாம். தாழ்சர்க்கரைநிலை வராது. சர்க்கரை நார்மலை விட குறைவது…சர்க்கரை அதிகமாக இருப்பதை விட டேஞ்சர். எனவே மயக்கம் வந்தால்…சர்க்கரையை வாயில் போடலாம்
 3. பெண்கள்: நாப்கின்கள் கிடைக்கவில்லை எனில் வீட்டில் இருக்கும் சுத்தமான பழைய துணிகளை பயன்படுத்தலாம். துணியை சதுரமாக வெட்டி எதிர்முனைகளை மடித்தால் முக்கோணவடிவம் கிடைக்கும். மற்றொரு துணியை மடித்து, முக்கோணத்தின் முனையில் வைத்து சுருட்டினால் நேப்கின் ரெடி.
 4. பாத்திரத்தில் மழைத்தண்ணீர் பிடித்து குடிப்பதற்கு பயன்படுத்தலாம்.
 5. வீட்டில் மெழுகு வர்த்தி, தீப்பெட்டி. பேட்டரி, டார்ச் லைட், பம்ப், ஸ்டவ் ஸ்டாக் வையுங்கள்
 6. அலர்ஜி ஆகி தடிப்பு தடிப்பாக ஏற்பட்டால் விபூதியை அத்தடிப்புகளில் பூசலாம். இச்சமயங்களில் அலர்ஜி மாத்திரை போட்டால் மயக்கம் வரலாம்.

 

 

Thoongavanam – review

முதலில் டிஸ்கி: சிங்கப்பூரில் 7 நிமிட வெட்டுக்களுடனேயே படம் வெளியானது (சில வன்முறைக்கட்சிகள் வெட்டப்பட்டதால்). இண்டர்வல் இல்லாததால் இடையில் ஒரு சில நிமிடங்களை காணத்தவறிவிட்டேன். இருந்தாலும், என் பார்வையில் படத்தைப் பற்றி ஒரு சில வரிகள்:

ஒரு முழுக்கலைஞனுக்குப் பல பரிமாணங்கள் தேவை. ஒரு குறுகிய வட்டத்திலேயே சுற்றுவது அவனை மேம்படுத்துவதில்லை.மேலும் பல பரிமாணங்கள் எடுப்பது அவருடைய ரசிகர் வட்டாரத்தையும் அதிகரிக்கிறது. பொதுவாகவே மசாலாவிலே நடிக்கும் ரஜினியை முள்ளும் மலரும் போன்ற படங்களுக்காக ரசிகர் அல்லாதவரும் ரசிப்பர். அதேபோல் அஜீத்துக்கு வாலி, வில்லன் etc. பதினாறு வயதினிலே மாதிரிப் படங்களில் மட்டுமே கமல் நடித்திருந்தால் என்றோ அவருக்கு மார்க்கெட் இல்லாமல் போயிருக்கும். சகலகலா வல்லவன் அவருடைய ரசிகர் வட்டத்தை அதிகரித்தது. காமெடிக்காக, நடிப்புக்காக எனப் பல விஷயங்களில் ஏதாவது ஒரு விஷயத்துக்காகவாவது எல்லாரும் கமலை ரசிப்பார்கள். இதை உணராமல் ஒரு குறிப்பிட்ட விதத்திலேயே நடிக்கும் பல நடிகர்களுக்கிடையில் பல வித வேடங்களில்/Genreகளில் நடிக்கும் மிகச்சிறு கலைஞர்களில் சிவாஜி முன்னோடி. கமல் பதினாறு அடி பாய்ந்த குட்டி. கமல் இது மாதிரிப் படங்களில் நடிக்க வேண்டுமா எனக் கேட்பவர்களுக்கு இதுதான் என் பதில். கமலுக்கும் வெரைட்டி தேவை. நமக்கும் கமலின் வெரைட்டி தேவை.

அதிகாலையில் அமைதியாகக் காத்திருக்கும் ஒரு காரில் தொடங்கும் கதை,கார் ஓடியதும் ஓட ஆரம்பித்து விடுகிறது. போதைப் பொருள் அபகரிப்பு, திருட்டுத்தனம், அதில் சொதப்பல், அதனால் வரும் விளைவுகள், போதைப் பொருளுக்காக அலையும் பல பாத்திரங்கள் எனப் படம் சுவாரசியமாகவே செல்கிறது. தேவையற்ற ஒரு காட்சி கூட இல்லை எனும் வண்ணம் அமைந்த திரைக்கதை நம்மை இருக்கை நுனிக்கே அழைத்துச் செல்கிறது. தியேட்டரில் ஸ்டூல் போட்டாலே போதும். இது மாதிரிப் படங்களுக்கு வசதியான இருக்கை தேவையில்லை.

போதைப் பொருள் கடத்தல், கமலின் பையன் கடத்தப்படுகிறான் எனப் பல விஷயங்கள் ட்ரெயிலரிலேயே தெரிந்தாலும், ஒரே இடத்திலேயே கதை சுற்றிச் சுற்றி வந்தாலும் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வியே கதையில் நம்மை ஆழ்த்தி விடுகிறது. மகனை சேதாரமின்றி கமல் எப்படி அல்லது எப்போது காப்பாற்றுவார் என்ற திடுக் திடுக் எதிர்பார்ப்புதான் திரைக்கதையின் பலம். கதையை/சுவாரசியத்தைக் கெடுக்கும் வகையில் ட்ரெயிலர் விடும் அளவுக்குக் கமல் அமெச்சூர் இல்லை. சொல்லப்போனால் ட்ரெயிலர் பார்த்து ஏற்பட்ட என் எதிர்பார்ப்பு சற்றும் குறையவில்லை.

கமல் நடிப்பு வழக்கம் போலவே கலக்கல். தேவையற்ற closeup கிடையாது. பஞ்ச் டயலாக் கிடையாது. ஆனாலும் கம்பீரத்தில் இயற்கையாகவே அவர் நடிப்பு மாஸ். போதைப்பொருளைத் தொலைத்ததும் ஏற்படும் பதட்டம், மகனை நினைத்து அழுகை என நடிப்பு வழக்கம் போலவே class. இதேபோலவே கமல் என்றென்றும் விதவிதமாக நடிக்க வேண்டுமென வேண்டுகிறேன். (இன்னும் அடுத்த ஐந்து படங்களிலாவது அவர் கண்டிப்பாக போலிசாக நடிக்க மாட்டார். அதுதானே கமல்). கமலின் பல படங்களில் அவர் பட்ட சங்கடங்கள்/அவமானங்கள் மெலிதாக உணர்த்தப்படும். உன்னைப் போல் ஒருவன் படத்தில் வோட்டர் லிஸ்ட் விவகாரம். இந்தப்படத்தில் விஸ்வரூபம் பட ரிலிஸ் பிரச்னையைக் கோடிட்டுக் காட்டுகிறார் சந்தான பாரதி மூலமாக “கடோத்கஜன்” படத்தின் பெயரில்.

திரிஷா, பிரகாஷ் ராஜ், சம்பத், கிஷோர், கமல் பையனாக வரும் சிறுவன் என அனைவருமே பொருத்தமாகவே நடித்துள்ளனர். சண்டைக்காட்சிகளில் திரிஷா முத்திரை பதிக்கிறார். ஓரிரு காட்சிகளில் வந்தாலும் ஜெகன், ஆஷா சரத், மது ஷாலினி என அனைவரும் கச்சிதம். சாம்ஸ், சந்தான பாரதி எனப் பலரும் அவ்வப்போது (உறுத்தாத வகையில், காட்சியின் அமைப்புடன் பொருந்தி) ஹ்யூமர் செய்கின்றனர். சப்டைட்டிலோடு பார்த்ததால் கேட்க விட்ட நகைச்சுவைகளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கிப்ரானின் இசை, ஷாம்சத்தின் ஒளிப்பதிவு, குனால் ராஜனின் ஒலிப்பதிவு, சுகாவின் வசனம் என எல்லாமே நிறைகள்தாம். உண்மையைச் சொல்லப்போனால் கதையின் ஓட்டத்தில் இவற்றை நன்கு கவனிக்க முடிவதில்லை. அவை உறுத்தவில்லை என்பதே நிறைதான். mindless ஆக்சன் படங்களுக்கிடையில் எப்படி ஆக்சன் படம் எடுக்க வேண்டும் என்பதற்கு இந்தப்படம் ஓர் உதாரணம். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு அடுத்தபடியாக என்னை மிகவும் ரசிக்க வைத்த ஒரு த்ரில்லர்.

My Rating 3.5/5

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் By Rajasirr

rajasirr

இதுவும் விஜய் படம் ஓடுற தியேட்டர் மாதிரி தான் ஓப்பன் பண்ணிட்டிங்க சரி படிச்சு தொலைச்சிட்டு போங்க😂😂

சரி மேட்டருக்கு வருவோம் அது என்ன பொன்னியின் செல்வன் அப்டினு யாரும் கேக்க மாட்டிங்கனு நினைக்கிறேன் முக்கால் வாசி பேருக்கு தெரிஞ்சிருக்கும் ஆனாலும் கொஞ்ச பேருக்கு தெரியாம இருக்கலாம் அவங்களுக்காக ஒரு சின்ன முன்னுரை

அதாவது பாத்திங்ணா பொன்னியின் செல்வர் யாருனா நம்ம கதையோட நாயகன் இல்ல நாயகனோட ஃப்ரண்டு அதாவது ஒரு மாபெரும் சக்கரவர்த்தி இப்ப இருக்க தஞ்சை பெரிய கோவில கட்டுன ராஜராஜ சோழனோட வாழ்க்கை வரலாறும் அவரோட பூர்வீகத்தையும் தான் நாம பாக்க போறோம்

image

டைட்டில் கார்ட் போட்டாச்சு அடுத்து ஆர்டிஸ்ட்டலாம் பாத்துடுவோம்

வல்லவரையன் வந்தியதேவன்

image

கதையின் நாயகன் வாணர் குலத்து இளவரசன் வல்லவரையன் வந்திய தேவன் இவன் வீராதி வீரன் சூராதி சூரன் (இந்த இடத்துல வேலாயுதம் படத்துல விஜய்ணா வால் சண்ட போடுவாரே அந்த சண்டய இமேஜின் பண்ணிக்கோங்க😁)

குந்தவை தேவி

image

கதாநாயகி: சுந்தர சோழரின்ஆ தவப்புதல்வி அறிவில் நூறு ஆப்பாயில்களுக்கு சமமான குந்தவி (எ) இளையபிராட்டியார் இவர் வச்சது தான் சட்டம் நாயம் தர்மம் எல்லாமே இவங்க கோடு போட்டா இவரோட தம்பி நம்ம பொன்னியின் செல்வர் ரோடு போட்டு அந்த ரோட்லயே சோத்த போட்டு குழம்ப ஊத்தி குழைச்சு அடிப்பாரு அந்த அளவுக்கு பாசம்னா பாருங்க..

பாக்கப்போனா சகோதர சகோதரி பாசத்துக்கு நாம இவங்கள…

View original post 963 more words